ஆயுஷ் மாத்ரே படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு
ஐபிஎல்

சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!

ராகுல் திரிபாதிக்கு ஓய்வு, ஆயுஷ் மாத்ரே சென்னை அணி வீரராக இன்று முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுகம்

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் திரிபாதிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்காக தமது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த வலது கை ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே, மாற்று வீரராக சென்னை அணியில் புதிய வரவாக சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிரட்டிய ஆயுஷ் மாத்ரே, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் நன்றாக விளையாடி ரன்களை திரட்டி கவனத்தை ஈர்த்தவர். இந்தநிலையில், அவர் மீதான மிகுந்த நம்பிக்கையால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத திரிபாதி மீது சென்னை அணி நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரேவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு முக்கியம்: குடியரசுத் தலைவா் உரை

SCROLL FOR NEXT