ஆர்சிபிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.
163 ரன்கள் இலக்கு
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களும், அபிஷேக் போரெல் 28 ரன்களும் எடுத்தனர். டு பிளெஸ்ஸி 22 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள் மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.