இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 சிக்ஸர்கள் அடங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது.
தொடக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரியான் பராக் தம் பங்கிற்கு அதிரடியாக 32 ரன்கள் சேர்க்க அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. அதுமட்டுமல்லாது, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார். இந்தநிலையில், 14 வயதே நிரம்பியுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.