சஹால். படம்: ஏபி
ஐபிஎல்

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவது குறித்து...

DIN

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். கடைசியாக சஹால் மே.18ஆம் தேதி விளையாடினார்.

இன்றிரவு மும்பையுடன் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவை தலா 4,3 முறைகளில் ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, சஹால் இருந்துள்ளார்.

அப்போது, மணிக்கட்டில் பாதுகாப்பு கவசமணிந்து கால்பந்து விளையாடுதல், ரன் அவுட், கேட்ச் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக காலியான வலைப் பயிற்சியில் சஹால் சில ஓவர்கள் வீசியுள்ளது பஞ்சாப் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT