ஷ்ரேயாஸ் ஐயர் - ஹார்திக் பாண்டியா.. 
ஐபிஎல்

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் மெதுவாக ஓவர் ரேட்டில் பந்து வீசிய இரு அணிகள் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 2-வது முறையாக இந்தத் தவறை செய்வதால் அவருக்கு ரூ.24 லட்சமும், மூன்றாவது முறையாக தவறு செய்த ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இரு அணியின் கேப்டன்களைத் தவிர்த்து அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் எது குறைவோ, அதை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நாளை(ஜூன் 3) நடைபெற்றும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT