படம்: ஆர்சிபி எக்ஸ் 
ஐபிஎல்

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் கோப்பையுடன் ஆர்சிபி வீரர்கள் ஊர்வலம் செல்வது பற்றி...

DIN

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இரு அணிகள் மோதிய நிலையில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது.

ஆர்சிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் விடியவிடிய வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிப் பேரணி

இந்த நிலையில், 18 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் பெற்ற கோப்பையுடன் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலம் செல்லவுள்ளனர்.

பெங்களூரு சட்டப்பேரவைக்கு வெளியே இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கவுள்ளது. சின்னசாமி மைதானத்தில் ஊர்வலம் நிறைவடைகிறது.

பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்கள் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறில் கெயில் ஆகியோரும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பு: போலி டிக்கெட் பரிசோதகா் கைது

ஹாத்வே நிகர லாபம் 46% சரிவு!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

SCROLL FOR NEXT