எம்.எஸ்.தோனி படம்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

43 வயதிலும் தோனிதான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர்: உத்தப்பா

முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனி குறித்து பேசியதாவது...

DIN

முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனி குறித்து 43 வயதிலும் அவர்தான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர் என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கடந்தாண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி கீப்பராகவும் பேட்டராகவும் மட்டுமே விளையாடி வருகிறார்.

264 ஐபிஎல் போட்டிகளில் 5,243 ரன்களை குவித்துள்ளார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு அவரது தலைமையில் கோப்பையை வென்றுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேசியதாவது:

ஐபிஎல் 2025-இல் தோனியின் அறிவாற்றலை பார்ப்போம்

தோனியைக் குறிப்பிட்டவரை, அவரது அறிவாற்றலின் முன்னோட்டங்களை நாம் பார்க்கவிருக்கிறோம் என நினைக்கிறேன்.

தோனி நம்.7 அல்லது நம்.8-இல் விளையாடுவாரென நான் எதிர்பார்க்கிறேன். கடைசி ஆண்டு போலவே இந்தாண்டும் 12-20 பந்துகளை விளையாடுவாரென நம்புகிறேன்.

தோனிக்கு கிரிக்கெட்டின் மீதான அன்பு குறையவில்ல, ஆர்வம் எப்போதுமே இறக்காது என நம்புகிறேன். அந்த ஆர்வமே அவரை இன்னும் விளையாட வைக்கிறது.

43 வயதிலும் தோனிதான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர்

43 வயதிலும் அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனபேன். அவ்வளவு திறமையும் ஆர்வமும் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். அப்படி இருக்கையில் எதுவுமே உங்களை தடுத்து நிறுத்தாது.

இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றாலும் நான் ஆச்சரியம் ஆகமாட்டேன். அதேவேளையில் அடுத்த 4 சீசன்கள் விளையாடினாலும் ஆச்சரியப்படமாட்டேன்.

சிஎஸ்கேவின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மார்ச்.23இல் சேப்பாக்கில் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT