கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மற்றும் தொடக்க விழா நிகழ்வுகள் மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, பிரமாண்ட தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் நடன நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் பாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போட்டி நடைபெறும் மாநிலமான மேற்கு வங்கத்தில் பிர்பும், நடியா, முர்ஷிதாம் உள்ளிட்டப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இன்னும் சில இடங்களில் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க: நடுவராகும் தமிழக வீரர்! ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் 7 புதிய நடுவர்கள்!
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக கொல்கத்தாவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 22 வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 11 மணியளவில் 700 சதவிகிதம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி முழுமையாகப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட தொடக்கவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்படும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் கோப்பைக்காக பஞ்சாப் அணி பூஜை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.