அஜிங்க்யா ரஹானே படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

பயப்பட வேண்டிய அவசியமில்லை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த சீசனில் இது எங்களுடைய முதல் போட்டி. எங்களது அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. சில விஷயங்களை சுட்டிக்காட்டி நான் பேச விரும்பவில்லை. ஒரு அணியாக நாங்கள் சில இடங்களில் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஒரு அணியாகவும், தனிநபராகவும் சில இடங்களில் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதனால், அவர்களுக்கு ஆதரவாகவே நான் பேசப் போகிறேன். அவர்களது சிறப்பான ஆட்டத்தை முயற்சி செய்தனர். அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இதுபோன்ற பல சூழல்களில் அணிக்காக அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களது முயற்சி சரியாக வேலை செய்தால், அது உண்மையில் சிறப்பாக இருக்கும். இது மிகவும் நீண்ட தொடர். ஒரு அணியாக ஒவ்வொரு தனிநபருக்கும் எங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.

மார்ச் 26 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT