சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி.  படம்: பிடிஐ
ஐபிஎல்

சாம்சன், ஜுரெல் அதிரடி போதவில்லை: 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.

அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 242-6 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும் சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தார்கள்.

கடைசியில் ஷுபம் துபே 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் சார்பில் ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளும் ஷமி, ஆடம் ஸாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் 2 (+2.200) புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT