கோப்புப்படம்  படம்: ஐபிஎல் வலைதளம்
ஐபிஎல்

லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்! நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட்டுகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 38,000 இருக்கைகளுக்கு 3.7 லட்சம் பேர் காத்திருந்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 28-ல் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.chennaisuperkings.com என்ற வலைதளத்தில் தொடங்கியது.

38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 3.7 லட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டபோதும் லட்சக்கணக்கானோர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

அதுமட்டுமின்றி, அதிகாரப்பூர்வ டிக்கெட் தொகை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், பல்வேறு சட்டத்துக்கு புறம்பான தளங்களிலும் கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT