சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஐபிஎல்

சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவித்து வரலாறு படைக்குமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று 300 ரன்கள் எடுக்குமா என்பது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 கிரிக்கெட் போட்டிகள் வேகமாக வளர்ந்துகொண்டு வருகின்றன. அதில் ஐபிஎல் போட்டிகள் மிகவும் பிரபலமான ஒன்றாகவும் அதிக லாபத்தை ஈட்டுவதாக இருப்பதாலும் உலகில் உள்ள சிறந்த வீரர்கள் இதில் விளையாட ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

18-ஆவது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் போட்டியில் 6 ஓவரில் 94 ரன்கள் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ஐபிஎல் ரன்களாகும்.

பிறகு யார் முதலில் இருக்கிறார்கள் என்பதுதானே கேள்வி. கடந்தாண்டும் இதே அணிதான் அதிகபட்சமாக 287 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த ஹைதராபாத் திடலில் மாலை 7 மணிக்கு போட்டி நடைபெறவிருப்பதால் சன்ரைசர்ஸ் 300 ரன்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பலம்வாய்ந்த பேட்டிங் Vs அனுபவமில்லா பந்துவீச்சு

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதீஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், பாட் கம்மின்ஸ், அபிநவ் மனோகர், அன்கித் வர்மா என அதிரடியாக விளையாடுபவர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள்.

லக்னௌ அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருப்பதால் இந்தப் போட்டியில் 300 ரன்கள் எளிதாக அடிக்க முடியுமென ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லக்னௌ அணி ஷர்துல் தாக்குர், ஷாபாஸ் அஹமது தவிர பெரிதாக அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது.

லக்னௌ அணி தனது முதல் போட்டியில் தில்லியுடன் மோதியது. இதில் 211 ரன்களை எதிரணிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்

287/3 - சன்ரைசர்ஸ் - 2024

286/6 - சன்ரைசர்ஸ் - 2025

277/3 - சன்ரைசர்ஸ் - 2024

272/7 - கேகேஆர் - 2024

266/7 - சன்ரைசர்ஸ் -2024

ஐந்தில் நான்கு முறை அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ள சன்ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் எப்போது வேண்டுமானாலும் 300 ரன்களை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸின் மந்திரம் என்ன?

இஷான் கிஷன் தனது முதல் சதத்தினை சன்ரைசர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியில் நிகழ்த்தினார். அது குறித்து பேசுகையில், “பாட் கம்மின்ஸ் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என்பதால் நாங்கள் அழுத்தமில்லாமல் விளையாடுகிறோம்” என்றார்.

டிராவிஸ் ஹெட் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வருகிறார்.

அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் நன்றாக விளையாடியதால் இந்திய அணியிலும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT