ரியான் பராக்.. 
ஐபிஎல்

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பொறுப்பு கேப்டனான ரியான் பராக்கிற்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 3 போட்டிகளில் தலைமை வகித்த 23 வயதான ரியான் பராக் மெதுவாக பந்துவீசியதற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!

ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22 இன் கீழ், மெதுவாக பந்துவீசிய குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் மீறல் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் இங்கிலாந்துக்கு எதிரான் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகியிருந்தார். மேலும், அவர் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மும்பை அணி லீக் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT