கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். மும்பை அணியில் அஸ்வனி குமார் என்பவருக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியில் ஒரேயொரு மாற்றமாக மொயின் அலிக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேபடன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புதூர்.
இதையும் படிக்க: ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.