எம்.எஸ்.தோனி படம்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது...

DIN

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.

தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவது கோப்பையை வென்றது.

ருதுராஜ் தலைமையில் 2024-இல் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியது. இந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக விலகவே தோனி மீண்டும் கேப்டனானார்.

தோனி கேப்டனாகியும் சிஎஸ்கேவின் தோல்விப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸி. விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான கில் கிறிஸ்ட் கூறியதாவது:

கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவருக்கு என்னச் செய்ய வேண்டும் எனத் தெரியும். ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடக் கூடாது.

நான் உங்களை நேசிக்கிறேன் எம்.எஸ்.தோனி. நீங்கள் ஒரு சாம்பியன், அடையாள சின்னம் எனக் கூறினார்.

பேட்டர்கள் சொதப்ப அணியில் பல மாற்றங்களை தோனி கொண்டு வந்துள்ளார். தற்போதுதான், ஓரளவுக்கு சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ளார்கள்.

டாஸின்போது தோனி நான் அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்றே எனக்குத் தெரியாது, இதில் அடுத்த சீசனில் எப்படி? என சிரித்துக்கொண்டே பேசியதும் கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாஜக ஆளும் மாநிலங்களில் கம்பு சுற்றுங்கள்: ஆளுநர் மீது முதல்வர் விமர்சனம்!

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

SCROLL FOR NEXT