முகப்பு
ஐபிஎல்

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 3 மே, 2025 at 1:42 PM
பகிர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆர்சிபியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜோஸ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக லுங்கி இங்கிடி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →