வருண் சக்கரவர்த்தியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்.  படம்: ஏபி
ஐபிஎல்

வருண் சக்கரவர்த்திக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25% அபராதம்!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வருண் சக்கரவர்த்திக்கு அபராதம் விதிப்பு.

DIN

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் வருண் சக்கரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை நேற்றிரவு (மே.7) வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஐபிஎல் விதிமுறை 2.5-இன் படி லெவல் 1 குற்றத்திற்காக கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

கொல்கத்தா அணிக்கு முக்கியமான பங்கினை அளித்துவரும் வருண் சக்கரவர்த்தி பேட்டர்கள் ஆட்டமிழப்புக்கு கொண்டாடிய விதம் சற்று விவாதத்துக்குள்ளாகியிருந்தது.

இந்தமுறை என்ன செய்தார் என ஐபிஎல் நிர்வாகம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. வருண் சக்கரவர்த்தி நடுவர்களின் அபாரதத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெவால்டு பிரீவிஸ் ஆட்டமிழப்புக்கு வருண் சக்கரவர்த்தியின் எதிர்வினைதான் காரணமாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

இந்தத் தோல்வியின் மூலம் கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

SCROLL FOR NEXT