ஐபிஎல் கோப்பையுடன் வீரர்கள். படம்: எக்ஸ் / ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!

போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியா பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.

”இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல” என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

நேற்றிரவு (மே.8) தர்மசாலாவில் ஐபிஎல் போட்டியின் 58-ஆவது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் தொடருமா அல்லது இந்தியாவிலேயே நடைபெறுமா என்பது பொறுத்திருந்துதான் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT