ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் சண்டைகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன.
17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி கடந்தாண்டு முதல் சிஎஸ்கே ரசிகர்களுடன் இந்த மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சீசனில் சிஎஸ்கேவுடனான 2 போட்டிகளிலும் ஆர்சிபியே வென்றது.
பெங்களூரில் நடந்த ஒரு போட்டிக்கு பிறகு ஒரு சிஎஸ்கே ரசிகையை சுற்றிநின்ற ஆர்சிபி வீரர்கள் நெருங்குவதும் அதற்கு அந்தப் பெண் 5 கோப்பைகளை தனது விரல்களில் காட்டியதும் பின்னர் காவல்துறையினர் வந்து அந்தப் பெண்ணை மீட்டதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் யூடியூப் நேர்காணலில் பங்கேற்ற ராபின் உத்தப்பா இது குறித்து பேசியதாவது:
திடலுக்கு வெளியே சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருந்தது. வீரர்களின் பேருந்து செல்லும்போது ரசிகர்கள் செயல் பிடிக்கவில்லை. அடுத்ததாக ரசிகர்கள் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
கூட்டத்துக்கு இடையே ஒரு பெண்ணை ஆர்சிபி ரசிகர்கள் வம்பிழுத்தது மிகவும் ஒழுக்கக் கேடானது. சென்னையிலும் இது நடக்கிறது.
ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கிண்டலடிக்க வெள்ளை நிற டீ ஷர்ட்டில் சிஎஸ்கே தடைசெய்யப்பட்ட அந்த 2 ஆண்டுகளை குறித்து அதற்குக் கீழே தல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
2 ஆண்டுகள் சிஎஸ்கே அணியினர் சிறையில் இருந்ததுபோல ஆர்சிபி ரசிகர்கள் அதைக் குறிப்பிடுகிறார்கள்.
விளையாட்டைத் தாண்டி செல்லும் இவைகளால் நான் மிகவும் கவலையடைகிறேன். கடைசியில் இவை எல்லாம் விளையாட்டு மட்டும்தானே என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.