சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர். படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார்.
ஐபிஎல்

பஞ்சாப் பேட்டிங்: மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக விளையாடம் இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக வந்திருக்கிறார்.

ஏற்கனவே, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி அவ்வளவு முக்கியமானதாக இல்லாமல் இருக்கிறது.

பஞ்சாப் வென்றால் ஆர்சிபி பிளே ஆஃப்ஸுக்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்ய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்திருப்பேன் என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்கா, குவேனா மபாகா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால், ஃபசல்ஹாக் ஃபரூக்.

பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மிட்செல் ஓவன், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

மராத்திய இளவரசி... ரிங்கு ராஜ்குரு!

இந்திய துரோகியா? பக்தனா? வெளியானது மம்மூட்டி - மோகன்லால் பட டீசர்!

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

SCROLL FOR NEXT