நூர் அகமது படம்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இருக்கும் சிஎஸ்கே வீரர் குறித்து...

DIN

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார்.

20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாடி வருகிறார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ச்சியாக நன்றாக பந்துவீசிவருவதில் நூர் அகமதும் ஒருவர். நேற்றிரவு ராஜஸ்தான் உடனான போட்டியில் ரியான் பராக்கை நூர் அகமது தனது சிறப்பான பந்தினால் போல்ட் ஆக்கினார்.

இந்த விக்கெட்டுடன் இந்த சீசனில் தனது 21-ஆவது விக்கெட்டினை நிறைவு செய்தார்.

ஏற்கனவே, 20 விக்கெட்டுகள் எடுத்தபோதும் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025-இல் அதிக விக்கெட்டுகள்

1. பிரசித் கிருஷ்ணா - 21 விக்கெட்டுகள் (குஜராத்)

2. நூர் அகமது - 21 விக்கெட்டுகள் (சிஎஸ்கே)

3. ஜாஷ் ஜேசில்வுட் - 18 விக்கெட்டுகள் (ஆர்சிபி)

4. டிரெண்ட் போல்ட் - 18 விக்கெட்டுகள் (மும்பை)

5. வருண் சக்கரவர்த்தி - 17 விக்கெட்டுகள் (கொல்கத்தா)

பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது இருவரும் 21 விக்கெட்டுகள் எடுத்தாலும் எகானமியில் குறைவாக இருப்பதால் பிரசித் கிருஷ்ணா முதலிடத்தில் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT