படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

DIN

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டிக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கான 4 அணிகளும் உறுதியாகின.

மும்பை இந்தியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற்றது. நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், தில்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது.

ஹேமங் பதானி கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி ஆரம்ப கட்ட போட்டிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமைந்த போதிலும், தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணிக்கு நிலையான தொடக்க ஆட்டக்காரர்கள் வேண்டுமென்றால், தொடக்க ஆட்டக்காரர்கள் கண்டிப்பாக சிறப்பான தொடக்கத்தைத் தருவது மிகவும் முக்கியம். உங்களுக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லையென்றால், தொடக்க ஆட்டக்காரர்களில் மாற்றம் செய்வதை தவிர்க்க முடியாது. மற்ற அணிகள் பவர் பிளேவில் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்கள். தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையாததால், பவர் பிளேவில் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாததால் தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டோம். முதலில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்கை தொடக்க ஆட்டக்காரராக முயற்சித்தோம். அது எங்களுக்கு பலனளிக்கவில்லை. பின்னர், அபிஷேக் போரெல், டு பிளெஸ்ஸிஸ், கருண் நாயர் போன்ற வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கினோம். இருந்தும், நாங்கள் நினைத்த தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாததால், எங்களால் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கினோம். முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றோம் என நினைக்கிறேன். அது மிகவும் சிறப்பான தொடக்கம். அதன் பின், விளையாடிய போட்டிகளில் நாங்கள் தடுமாறினோம். வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் தோல்விடையந்தோம். அந்த போட்டிகளில் எல்லாம் வென்றிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் வெற்றி பெறவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனதற்கு எங்களை நாங்களே குறைகூறிக்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT