குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
ரோஹித் சர்மா சாதனை
பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. மும்பை அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அரைசதம் விளாசி விளையாடி வரும் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.