ரோஹித் சர்மா படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்

ஒரே போட்டியில் 3 சாதனைகள்: ஹிட் மேன் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

DIN

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 3 புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த சீசனில் ஏற்ற இறக்கங்களோடு விளையாடிய இவரை ரசிகர்கள் ஹிட் மேன் என ஏன் அழைக்கிறார் என இந்தப் போட்டியில் நிரூபித்து காட்டினார்.

7,000 ஐபிஎல் ரன்களை கடந்து சாதனை

ஐபிஎல் தொடரில் 266 இன்னிங்ஸில் விளையாடி 7,038 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் 2-ஆவது அதிகபட்ச ரன்களாகும். முதலிடத்தில் கோலி 8,618 ரன்களுடன் இருக்கிறார்.

21-ஆவது ஆட்ட நாயகன் விருது

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்களில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார். இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளார்.

எபிடி வில்லியர்ஸ் - 25

கிறிஸ் கெயில் - 22

ரோஹித் சர்மா - 21

விராட் கோலி - 19

300 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர்

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் (302)அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார்.

கெயில் - 357

ரோஹித் - 302

கோலி - 291

தோனி - 264

ஏபிடி - 251

இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் ‘குவாலிஃபயா் 2’-வில் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT