ஐபிஎல்-2020

கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கு மரியாதை செலுத்தும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி

DIN

கரோனா முன்களப் பணியாளா்களுக்கு மரியாதை செலுத்த கோலி தலைமையிலான ஆர்சிபி அணி முடிவெடுத்துள்ளது.

கரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சைகளில் மருத்துவா்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வருகிறாா்கள். இந்தியா முழுவதும் கரோனா சிகிச்சைகள் மிகத் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் விளைவாக, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் சில மருத்துவா்களும், செவிலியா்களும் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு மரியாதை செலுத்த ஆர்சிபி அணி முடிவெடுத்துள்ளது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் சட்டையில் மை கோவிட் ஹீரோஸ் (என் கோவிட் கதாநாயகர்கள்) என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த உடையை பயிற்சியின்போது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் அணிய ஆர்சிபி வீரர்கள் முடிவெடுத்துள்ளார்கள். 

கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை என்னுடைய கதாநாயர்களாக எண்ணுவதில் பெருமை கொள்கிறேன் என்று கோலி கூறியுள்ளார். 

ஆர்சிபி அணி செப்டம்பர் 21 அன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT