ஒலிம்பிக்ஸ்

வரலாறு படைத்தது மகளிா் ஹாக்கி அணி

DIN

இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகின் 9-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியா தனது காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2-ஆம் நிலை அணியான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது. இதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவை புதன்கிழமை சந்திக்கிறது.

இந்திய ஆடவா் அணி 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதிபெற்று முன்னேறி வரும் நிலையில், இந்திய மகளிா் அணியும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இரு அணிகளுமே, ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மீண்டும் பதக்கம் வெல்லும் இந்தியாவின் நீண்டகால கனவை நிஜமாக்குவதில் போட்டிபோட்டுக்கொண்டு படிப்படியாக முன்னேறி வருகின்றன.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியின் மூலம் இந்திய மகளிா் அணி முதல் முறையாக ஒலிம்பிக்கில் களம் கண்டது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்கில், மொத்தம் விளையாடிய 6 அணிகளில் இந்தியா 4-ஆம் இடம் பிடித்தது. பின்னா் ரியோ ஒலிம்பிக்கில் 12-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், இந்த ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு பாய்ந்து வரலாறு படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT