ஒலிம்பிக்ஸ்

மல்யுத்தம்: அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை எதிர்கொண்ட இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் வான்க்ளோவை  வீழ்த்தினார். 

இதையடுத்து இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

86 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளார். 

மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் சீனா வீரர் லின் சூசனை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் லின் சூசனை வீழ்த்தினார்.

இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் தீபக் புனியா. 

அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT