ரவிக்குமார் தாஹியா (கோப்புப் படம்) 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவி தாஹியா...

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் (ஆர்.ஓ.சி.) ஜாவுர் உகுயேவை எதிர்கொண்டார்.

ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரரைத் தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள 5-வது பதக்கம் இது. இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

SCROLL FOR NEXT