முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு: மத்திய பிரதேச அரசு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 9 ஆகஸ்ட், 2021 at 9:16 AM
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடியது. அதில் தோல்வியடைந்த இந்திய அணி 4-ம் இடத்தைப் பிடித்தது. 

பதக்கம் வெல்லாதபோதும் வீராங்கனைகள் ஒவ்வொரும் தங்கம் என அவர்களது சாதனைகளை நாடே கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

Advertisement

நமது மகளிர் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக்கில் தோற்றிருந்தாலும் நாட்டு மக்களின் இதயத்தை வென்றுவிட்டனர் என்று அம்மாநில முதுல்வர் சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.