முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்: சானியா, அன்கிதா இணை அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா இணை அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

Updated On : 25 ஜூலை, 2021 at 12:46 PM
பகிர்:


டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா இணை அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் முதல் சுற்றில் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா இணை உக்ரைனின் லுயுட்மைலா மற்றும் நடியா இணையை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை இந்திய அணி 0-6 என்ற கணக்கில் மோசமாக இழந்தது.

இரண்டாவது செட்டில் சானியா, அன்கிதா இணை எழுச்சி கண்டாலும் இறுதியில் 7-6 என்ற கணக்கில் உக்ரைனே கைப்பற்றியது. மூன்றாவது செட்டில் இந்திய இணை விடாது போராடினாலும் இறுதியில் 8-10 என்ற கணக்கில் இழந்தது.

Advertisement

இதன்மூலம், 6-0, 7-6, 10-8 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைன் இணை வெற்றி பெற்றது.

ஒலிம்பிக்கில் சானியா மிர்சா இந்தியாவுக்காக விளையாடியது இது 4-வது முறை. அன்கிதாவுக்கு இது முதன்முறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.