ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: டென்னிஸ் போட்டியில் பிரபல வீராங்கனை ஒசாகா அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிரபல வீராங்கனை ஒசாகா, 3-வது சுற்றில் தோல்வியடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிரபல வீராங்கனை ஒசாகா, 3-வது சுற்றில் தோல்வியடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா, நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சமீபத்தில் 2020 யு.எஸ். ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றார். தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளார். விளையாட்டு வணிகப் பத்திரிகையான ஸ்போர்டிகோ சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 400 கோடி (55.2 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 23 வயது ஒசாகா. இதில் 37.68 கோடி (5.2 மில்லியன் டாலர்), டென்னிஸ் போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையாகக் கிடைத்துள்ளது. இதர வருமானம் விளம்பரங்கள் வழியாகக் கிடைத்துள்ளன. இதனால் அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனை என்கிற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டாவை எதிர்கொண்டார் ஒசாகா. இந்த ஆட்டத்தில் 1-6, 4-6 என எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார் ஒசாகா. இதையடுத்து மகளிர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை வகித்துள்ள வீராங்கனைகள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். தரவரிசையில் 4, 5-ம் இடங்களைப் பிடித்துள்ள வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. 

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT