ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸில் ஆடவா் ஒற்றையா் பிரிவில்...
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:16 AM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் 3-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
3-வது சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரா் மா லாங்கை எதிர்கொண்டார் சரத் கமல். நடப்பு உலக சாம்பியனாகவும் உள்ள மா லாங்கிடம் 7-11, 11-8, 11-13, 4-11, 4-11 எனப் போராடி தோற்றார். இந்த ஆட்டம் 46 நிமிடங்கள் நீடித்தன.
சரத் கமல் தோற்றதால் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணியினர் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். இதற்கு முன்பு மணிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி, ஜி. சத்யன் ஆகியோர் தோல்வியடைந்தார்கள்.
Advertisement