ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 3 கோடி - ரயில்வே துறை அறிவிப்பு 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 3 கோடி - ரயில்வே துறை அறிவிப்பு

இந்திய ரயில்வே துறையைச் சார்ந்த  விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அவர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

DIN

இந்திய ரயில்வே துறையைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அவர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட வீரர்களில் 25 பேர் ரயில்வே துறை ஊழியர்கள். போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் 20 சதவீதம் பேர் ரயில்வேயில் இருப்பதால் அவர்கள்  போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அளித்த தகவலில் " விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரயில்வே துறையைச் சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் 3 கோடியும் , வெள்ளி வென்றால் 2 கோடி, வெண்கலத்திற்கு 1 கோடி என்கிற அளவில் பரிசுத்தொகையை அளிக்க இருக்கிறோம். மேலும் இறுதிச்சசுற்று வரை செல்லும் வீரர்களுக்கு 35 லட்சம் ரூபாயும் , போட்டியில் கலந்து கொண்டாலே 7.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும்  தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு 25 லட்சம் ரூபாயும் , வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு 20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு 15 லட்சமும் பரிசுத்தொகையாக  வழங்கப்படும் " என  இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது .

முன்னதாக பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சோனுவிற்கு 2 கோடி ரூபாய்  பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிப்படைத் தன்மைக்காகத் தேர்வா? துணிந்து பொய் சொல்கிறார் ஞானேஷ் குமார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குளிர் ஜாலம்... மாதுரி ஜெயின்!

ஓடிடியில் காந்தா எப்போது?

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சாலையில் ஓடிய கரடி! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! | வால்பாறை | Shorts

SCROLL FOR NEXT