முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

ஒரேயொரு தோல்வியுடன் குரூப் ஏ-வில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை 5-3 என வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

முந்தைய ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா, தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானை இன்று சந்தித்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்தன. இறுதியில் 5-3 என ஜப்பானை வீழ்த்தியது இந்தியா. குர்ஜந்த் சிங் இரு கோல்களை அடித்தார். 

ஒரேயொரு தோல்வியுடன் குரூப் ஏ-வில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி. குரூப் சுற்று முடிவில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →