முகப்பு
ஒலிம்பிக்ஸ்

கரோனாவால் இருமுறை பாதிப்பு: ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று அசத்திய இங்கிலாந்து வீரர்

ஐந்து மாத இடைவெளியில் இருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டாம் டீன்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

ஐந்து மாத இடைவெளியில் இருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டாம் டீன், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் 200 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சக நாட்டவரான டங்கன் ஸ்காட்டைப் பின்னுக்குத் தள்ளி 1:44.22 நிமிடத்தில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் 21 வயது டாம் டீன். இவருடைய வெற்றியை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். காரணம், கடந்த ஜனவரி மாதம் 2-வது முறையாக கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அதற்கு முன்பு செப்டம்பர் மாதம் முதல்முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். 

ஜனவரியில் கரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டு என்னுடைய ஃபிளாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது தங்கம் என்னை விட்டு வெகுதூரத்தில் இருப்பது போல தோன்றியது. தற்போது கனவு நிறைவேறியுள்ளது. கடந்த 12 மாதங்களில் இருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்டேன். இது யாரும் கேள்விப்படாதது என்று வெற்றிக்குப் பிறகு தனது மகிழ்ச்சியை டாம் டீன் பகிர்ந்துகொண்டுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments