ஒலிம்பிக்ஸ்

52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.,யை வீழ்த்திய இந்தியா!

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

DIN

ஆடவா் ஹாக்கி குரூப் சுற்றில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. ஒலிம்பிக் ஹாக்கியில் கடந்த 52 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் 1972 மியுனிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அந்த அணியை வென்றிருந்தது.

ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட இந்தியா, குரூப் சுற்று ஆட்டங்களை 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்திருக்கிறது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக அபிஷேக் 12-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கினாா். அடுத்த நிமிஷமே கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் கோலடித்து முன்னிலையை 2-0 என அதிகரித்தாா். இந்நிலையில் தாமஸ் கிரெய்க் 25-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலியாவின் கணக்கை தொடங்கினாா். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் 32-ஆவது நிமிஷத்திலேயே ஹா்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோலடித்து முன்னிலையை 3-1 என அதிகரித்தாா். இந்தியா அதை இறுதிவரை தக்கவைத்த நிலையில், 55-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவா்ஸ் கோலடிக்க, அந்த அணி 2-3 என நெருங்கியது. எனினும், எஞ்சிய நேரத்தில் இந்தியா மேலும் கோல் வாய்ப்பு கொடுக்காமல் 3-2 என வெற்றியை உறுதி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT