ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: பாட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி!

ஒலிம்பிக்ஸ்: பாட்மின்டனில் வெள்ளிப் பதக்கத்தை நழுவ விட்டார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்..

DIN

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்துள்ளார்.

பாட்மின்டன் ஆடவர் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், கடந்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த விக்டர் ஆக்ஸெல்சென்னிடம் தோல்வி கண்டார். 20-22, 14-21 என்ற செட் கணக்கில் உலகின் இரண்டாம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னிடம் வீழ்ந்தார். இதையடுத்து தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார்.

எனினும், திங்கள்கிழமை(ஆக. 5) நடைபெறும் ஆட்டத்தில் மலேசியாவின் லீ ஸீ ஜியாவை எதிர்கொள்கிறார் லக்‌ஷயா சென். இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில், இந்தியாவுக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT