முகப்பு
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஹாக்கி அணி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 4:25 PM
மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் - படம்: பரீஸ் ஒலிம்பிக்
பகிர்:
Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 3:30 PM

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 3:45 PM

கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷுட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி இன்று (ஆக. 4) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது.

Advertisement

பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார்.

நான்காவது காலிறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்திய அணி 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரரானார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 3:45 PM

கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.