படம் | லக்‌ஷயா சென் எக்ஸ் தளப் பதிவு
ஒலிம்பிக்ஸ்

பாட்மின்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் லக்‌ஷயா சென் தோல்வி!

ஒலிம்பிக் பாட்மின்டன்: லக்‌ஷயா சென் தோல்வி!

DIN

பாரீஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்துள்ளார்.

பாட்மின்டன் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று(ஆக. 5) நடைபெற்றது. அதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், மலேசியாவின் லீ ஸீ ஜியாவிடம் தோல்வி கண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 16-21, 11-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்து, உலகின் 7-ஆம் நிலை வீரரான லீ ஸீ ஜியாவிடம் வீழ்ந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார்.

பாட்மின்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து இம்முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில், உலகின் 22-ஆம் நிலையில் இருக்கும் லக்‌ஷயா சென் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் முதல் செட்டை அவர் எளிதாகக் கைப்பற்றிய போதிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை இழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT