பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (ஆக. 6) இந்தியாவுக்கு ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்தநிலையில் நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சாதனையையும் படைத்தார்.
தகுதிச் சுற்றில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள்
1. நீரஜ் சோப்ரா (இந்தியா) 89.34 மீட்டர்
2. ஏ. பீட்டர்சு (கிரெனடா) 88.63 மீட்டர்
3. ஏ. நதீம் (பாகிஸ்தான்) 86.59 மீட்டர்
4. எல். எடலடலோ(பின்லாந்து) 82.91 மீட்டர்
5. எல். எம். ட சில்வா(பிரேசில்) 81.62 மீட்டர்
நீரஜ் சோப்ரா 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ராவுக்கு ஜக்குப் வட்லெஜ், ஜூலியன் வெபர், அர்ஷத் நதீம், ஆண்டர்சன் பீட்டர்ஸ், சமீபத்தில் 90 மீட்டர் தூரம் எறித்து அசத்திய ஜெர்மனி வீரர் மேக்ஸ் டெஹ்னிங் போன்றவர்களிடம் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.