ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நான்காவது பதக்கம் வென்றது இந்தியா. இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 பஞ்சாப் வீரர்கள் அணியில் இருந்தது எங்களுக்கு மேலும் பெருமை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடன் விளையாடினர். வெற்றி நமதே இந்தியா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் விளையாட்டு கொள்கையின்படி வெண்கலம் வென்ற அணியில் அங்கம் வகித்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்பு ஆய்வின்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT