வினேஷ் போகத் / ரவிச்சந்திரன் அஸ்வின் 
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்: அஸ்வின் நம்பிக்கை!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது.

மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த அவா், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு ஆளாகியிருந்தாா். அதில் பதக்கம் வென்று வரலாறு படைக்க இருந்த நிலையில், நிா்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடர்ந்து, சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில், விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தின் தீா்ப்புக்காக அவர் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்ற இன்று(ஆக. 13) தீர்ப்பளிக்கிறது.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, அபிநவ் பிந்த்ரா உள்பட பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் உள்ளனர்.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என்று தான் உறுதியாக நம்புவதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்று(ஆக. 13) எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT