முகப்பு
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தையில் இந்திய அணி தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Updated On : 29 ஜூலை, 2024 at 2:17 PM
வில்வித்தை போட்டியில் துருக்கியை எதிர்கொள்ளும் இந்திய அணி
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

துருக்கி அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவுக்கான குழு வில்வித்தைப் போட்டி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமான ஆட்டத்தையே இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் 57 - 53, இரண்டாம் சுற்றில் 55 - 52, மூன்றாம் சுற்றில் 55 - 54, நான்காம் சுற்றில் 58 - 54 என்ற புள்ளிகளையே பெற்றது. முடிவில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

துருக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முழு கட்டுரையைப் படிக்க →