லவ்லினா போர்கோஹைன் 
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் லவ்லினா!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறினார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

குத்துச்சண்டை 75 கிலோ பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். நார்வே வீராங்கனை ஹோஃப்ஸ்டாடை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல் வெல்டர்வெயிட் பிரிவில் (69 கிலோ) லவ்லினா போர்கோஹைன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் 2012 இல் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆவார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல், லவ்லினா ஜெர்மனியின் நாடின் அபெட்ஸை 16 ஆவது சுற்றில் தோற்கடித்து, காலிறுதிப் போட்டியில் தைவானின் சென் நியென்-சின்னை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவர் ஆசிய சாம்பியன்ஷிப்போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

SCROLL FOR NEXT