ஸ்பெஷல்

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா அடுத்த வாரம் திருமணம்

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அடுத்த வாரம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா அடுத்த வாரம் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். 

ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது. 

2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. 

பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரிடையிலான நட்பு மலர்ந்தது. 

இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ந் தேதி விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வரும் 9-ந் தேதி துவங்கும் திருமண வைபவங்களை அடுத்து டிசம்பர் 12-ல் இவர்கள் திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் எனவும், இதில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போவதாகவும், இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளார். இதனை கடந்த செப்டம்பர் மாதமே பிசிசிஐ-யிடமும் தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் இவை அனைத்தையும் அனுஷ்கா ஷ்ரமாவின் மேலாளர் மறுத்துள்ளார். இது வெறும் வதந்தி என்றும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

முதல் வீரராக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

தொடர் சர்ச்சையில் நிதீஷ்! மனநலன் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!!

புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!

SCROLL FOR NEXT