முகப்பு
ஸ்பெஷல்

இது சென்னை சூப்பர் கிங்ஸ், புணே சூப்பர் கிங்ஸ் அல்ல: தோனி 

இது சென்னை சூப்பர் கிங்ஸ், புணே சூப்பர் கிங்ஸ் அல்ல. இருப்பினும் 7-ஆவது போட்டியின் இறுதியில் இதே மைதானத்தில் அதிகளவிலான மஞ்சள் அலையை நீங்கள் பார்க்கக்கூடும்.

Updated On : 21 ஏப்ரல், 2018 at 5:53 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:19 PM

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 17-ஆவது லீக் ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து.

போட்டி முடிந்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Advertisement

கடந்த போட்டியில் தோல்வியுற்றதால் இது மிகப்பெரிய போட்டியாகவே அமைந்தது. இதில் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு தொடரின் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று பின்தங்கிய பின்புதான் வேகமெடுக்கும். ஆனால் இந்த தொடர் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அனைவரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இது மிக நீண்ட தொடராக உள்ளதால் வீரர்கள் தங்களின் உடல்தகுதியை பராமரிப்பது மிக முக்கியமாகும். ஏனெனில் அணியில் உள்ள பெரும்பாலானோர் 30 வயதைக் கடந்தவர்கள். அதுபோல இதில் அனுபவம் நிச்சயம் தேவை. எங்களிடம் உள்ள வீரர்கள் அனைவரும் அனுபவம் பெற்றவர்கள்தான். எனவே எப்படி செயல்படுவது என்று அவர்களுக்கு தெரியும். அதுபோல சிறந்த ஃபீல்டர்களும் உள்ளனர். 

கடந்த 2 வருடங்களாக விளையாடாத சிஎஸ்கே மறுபடியும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளது. ஆனால் தற்போது விளையாடி வரும் களம் சற்று புதுமையானது தான். நானும் ஒரு காலத்தில் புணேவுக்காக விளையாடியுள்ளேன். அப்போது இங்குள்ள ரசிகர்கள் எனக்கும், எனது அணிக்கும் எப்போதும் ஆதரவளித்து உடனிருந்து வருகின்றனர். எனவே ரசிகர்களுக்கு கைமாறு செய்யும் தருணம் வந்துவிட்டது. 

புணே ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது எதிரணி என்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம். ஏனென்றால் இது சென்னை சூப்பர் கிங்ஸ், புணே சூப்பர் கிங்ஸ் அல்ல. இருப்பினும் 7-ஆவது போட்டியின் இறுதியில் இதே மைதானத்தில் அதிகளவிலான மஞ்சள் அலையை நீங்கள் பார்க்கக்கூடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.