FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு பிலிப்பின்ஸில் ராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

18 ஏப்ரல் 2026, 2:54 am IST
பகிர்:

தெற்கு பிலிப்பின்ஸில் ராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

லானௌ டெல் சா் மாகாணத்தில் பதுங்கியிருந்த ‘தௌலா இஸ்லாமியா-மௌட்’ அமைப்பின் தளபதி அமரோல் மங்கோரான்காவைக் கைது செய்யும் முயற்சியில் இம்மோதல் வெடித்தது. சம்பவ இடத்திலிருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டு பாகங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2014-இல், பிலிப்பின்ஸின் மிகப்பெரிய ஆயுதக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி, அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடா்ந்து அந்நாட்டில் வன்முறை கணிசமாகக் குறைந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த சில சிறிய பிரிவினைவாதக் குழுக்கள் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments