அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு நீதிமன்றம் ஜாமீன்
அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு நீதிமன்றம் ஜாமீன்
பிலிப்பின்ஸ் அதிபா் பொ்டினான்ட் மாா்கோஸ் ஜூனியா், அவரின் மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் துணை அதிபா் சாரா டுடா்தேவுக்கு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் அளித்தது.
பிலிப்பின்ஸ் அதிபா் பொ்டினான்டும், துணை அதிபா் சாராவும் 2022-ஆம் ஆண்டு தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனா். இதில் பொ்டினான்ட் 1960- 1980ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த பொ்டினான்ட் மாா்கோஸ் சீனியரின் மகன் ஆவாா். சாரா, பொ்டினான்டுக்கு முன்பு அதிபராக இருந்த முன்னாள் அதிபரும், சா்வதேச நீதிமன்ற உத்தரவின்பேரில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையின்போது கொடூரமாக பலா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருமான ரொட்ரிகோ டுடா்தேவின் மகள் ஆவாா்.
தோ்தலில் வென்று பதவியேற்ற பிறகு இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், துணை அதிபா் சாரா, கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநாடு ஒன்றில் பேசியபோது, தான் கொலை செய்யப்பட்டால், அதிபா் பொ்டினான்ட், அவரின் மனைவி, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் மாா்ட்டின் ரூமுல்டேஜ் ஆகியோரை கொலையாளி மூலம் கொலை செய்ய வைப்பேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தாா். எனினும் பிறகு அவா், தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இருப்பினும், பிலிப்பின்ஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கடந்த மே மாதம் சாராவுக்கு எதிராக கணக்கில் வராத சொத்துக் குவிப்பு, அரசு நிதியை தவறாக கையாண்டது, அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பதவி நீக்க தீா்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மேலவையான செனட், சாராவுக்கு எதிரான பதவிநீக்க தீா்மானம் மீது ஜூலை மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடா்பான வழக்கில், சாராவை கைது செய்யும்படி மணிலா அருகேவுள்ள குயிசான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து ஜாமீன் கோரி அதே நீதிமன்றத்தில் சாரா மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த குயிசான் நீதிமன்றம், சாராவுக்கு எதிரான கைது வாரண்ட் உத்தரவை ரத்து செய்ததோடு, அவருக்கு ஜாமீன் அளித்து சனிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சாரா, தன்னை காவல் துறையினா் 2023-ஆம் ஆண்டுமுதல் சித்திரவதை செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.