FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதர் கான் ஜாமீன் மனு: தில்லி போலீஸிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்!

அதர் கானின் ஜாமீன் மனுவுக்குப் பதில் கோரிய உச்ச நீதிமன்றம் பற்றி...

தில்லி கலவரம்
பகிர்:

தில்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதர் கான் தாக்கல் செய்த மனு குறித்து தில்லி போலீஸாரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் ஜூலை 7-ஆம் தேதி தீர்ப்பை எதிர்த்து அதர் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தில்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும். எட்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடவும், என்று அந்த அமர்வு கூறியது.

Advertisement

Advertisement

2020 தில்லி கலவரத்தின்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக அதர் கான் இருந்தாரே தவிர, அவர் உள்ளூர் அளவிலான செயல்பாட்டாளர் அல்ல என்றும் கூறி, தனக்கு நிவாரணம் மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 29-ம் தேதி உத்தரவை எதிர்த்து அதர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தான் ஒரு உள்ளூர் அளவிலான ஒருங்கிணைப்பாளர் மட்டுமே என்றும், ஆறு ஆண்டுகளாகக் காவலில் இருப்பதாகவும், அதேபோன்ற சூழலில் உள்ள மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்றும் கூறி அதரின் வழக்குரைஞர் ஜாமீன் கோரியிருந்தார்.

அதர் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு, தில்லி போலீஸார் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments