FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றலாம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!

இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக..

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:37 pm IST
இம்ரான் கான் - file photo
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஷாஹித் ஷாஹித் தலைமையிலான, நீதிபதிகள் நயீம் அக்தர் ஆப்கன் மற்றும் இஷ்டியாக் இப்ராகிம் ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பித்தது.

நாட்டில் அரசியல் கைதிகள் மீது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம். அவரது குடும்பத்தினருடன் வாரந்தோறும் சந்திப்புகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உஸ்மா கான் ஆகியோர் இணைந்து செயல்படும் வகையில் ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேவேளையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இம்ரான் கானின் வழக்குரைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது மருத்துவ அறிக்கைகளை ஊடகங்களுடன் பகிரவோ அல்லது அரசியலாக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர்.

இம்ரான் கானில் உடல்நிலை குறித்த வதந்திகள் அதிகரித்துவரும் சூழலில் பாகிஸ்தான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 2023 முதல் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறையின் கண்காணிப்பாளர், முன்னாள் பிரதமரின் உடல்நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மறுநாளே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Following growing concerns over his medical condition, Pakistan's Supreme Court on Tuesday directed authorities to transfer jailed former prime minister Imran Khan to Islamabad's Shifa International Hospital for a health evaluation, according to a report by Dawn.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments